இதவிட துல்லியமான ‘நிலவை’ பார்த்துருக்க முடியாது…! ‘மொத்தம் 55,000 ஃபோட்டோஸ்…’ ‘2000 ஃப்ரேம்கள்…’ ‘186 ஜிபி டேட்டா…’கலக்கும் மாணவனின்..

மகாராஷ்டிராவை சேர்ந்த 16 வயது மாணவர், நிலவின் முப்பரிமாண புகைப்படத்தை உருவாக்கி இணையத்தில் வைரலாகி உள்ளார்.

Maharashtra student 3 dimensional photo of the moon

மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரதமேஷ் ஜாஜூ என்னும் சிறுவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் இல்லை, மேலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட சூழலில் தனது நேரத்தை செம்மையாக செலவிட்டு வருகிறார்.

இவர், தன்னிடமிருந்த டெலஸ்கோப்பில் நிலாவை விதவிதமாக 55,000 படங்கள் எடுத்துள்ளார். அந்த 55,000 படங்களையும் இணைத்து 50 எம்பி அளவில் ஒரே புகைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படத்தை கோர்க்க இவரது லேப்டாப்பிலிருந்து சுமார் 186 ஜிபி டேட்டா தேவைப்பட்டுள்ளது.

பிரதமேஷ்ஷிம் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி இந்தியா மட்டுமல்லமால் உலகளவில் உற்றுநோக்க வைத்துள்ளது.

மொத்தமாக 38 வீடியோக்கள் வந்தது. ஒவ்வொரு வீடியோவும் 2000 ஃப்ரேம்கள் கொண்டவை. இந்த ஒவ்வொரு வீடியோவையும் இணைத்து தான் ஒரே படமாக உருவாக்கினேன். இதனை எடுக்க மட்டும் நான்கு மணிநேரம் தேவைப்பட்டது

அதை விட இவை எல்லாவற்றையும் ஒன்றாக கோர்வையாக சேர்த்து ஒழுங்கு முறைப்படுத்த மூன்று நாட்கள் ஆனது. இதனால் எனது லேப்டாப்பே செயலிழக்கும் நிலை வந்தது. வெறும் 50 எம்பி அளவில் ஒரே புகைப்படமாக உருவாக்க, எனது லேப்டாப்பிலிருந்து சுமார் 186 ஜிபி டேட்டா தேவைப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.

Maharashtra student 3 dimensional photo of the moon

அதோடு, ‘நான் ஒரு வானியற்பியலாளராகவும், வானியலை தொழில் ரீதியாகவும் படிக்க விரும்புகிறேன், ஆனால் வானியல் புகைப்படம் எடுத்தல் என்பது எனக்கு இப்போது ஒரு பொழுதுபோக்காக இருக்கிறது’ எனவும் தன் எதிர்கால லட்சியம் கூறித்து கூறியுள்ளார்.

Contact Us