லாரன்ஸ் ஒன்னா நம்பர் டுபாக்கூர், சுயநலவாதி.. ம**று என கிழித்தெறிந்த இயக்குனர்

சினிமா நடிகர்களில் பொதுசேவை உள்ள நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ஊனமுற்ற குழந்தைகளுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருவதால் ரசிகர்களையும் தாண்டி நல்ல மனதிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் .  சினிமாவில் உதவி நடன இயக்குனராக தன் கேரியரை தொடங்கிய ராகவா லாரன்ஸ் அதன்பிறகு டான்ஸ் மாஸ்டராக மாறி பின்னாளில் இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டார்.

அதுவும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பினை பெற்று முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனைகளை செய்துள்ளன. ராகவா லாரன்ஸ் சினிமாவையும் தாண்டி சினிமாவில் உள்ள பலருக்கும் உதவிகளை செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட ராகவா லாரன்சை, ஆகாஷ் சுதாகர் என்ற இயக்குனர் லாரன்ஸ் ஒரு ஒன்னா நம்பர் டுபாக்கூர் எனவும், தன்னுடைய படங்கள் வெளியாகும்போது மட்டும் சுய விளம்பரத்திற்காக நல்லது செய்வது போல் நடிக்கிறார் எனவும் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஆகாஷ் சுதாகர் 2018 ஆம் ஆண்டு நரி வேட்டை என்கிற ஒரே ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்காடி தெரு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனிக்கப்படும் நடிகையான சிந்து என்பவர் சமீபகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டதை வைத்து ராகவா லாரன்சை அசிங்க அசிங்கமாக பேசி வருகிறார் இந்த இயக்குனர்.

மேலும் ராகவா லாரன்சை ஆள் வைத்து தூக்கி விடுவேன் என்று பேசியதெல்லாம் உணர்ச்சிவசத்தின் உச்சகட்டம். உண்மையாலுமே லாரன்ஸ் அப்படிப்பட்டவர் தானா, அல்லது அவர் மீதுள்ள பொறாமையில் இப்படி கூறுகிறாரா என்பதுதான் தெரியவில்லை.

 

Contact Us