ரிச்சாட் பிரான்சன் வங்குரோத்து- வேர்ஜின் மீடியாவை 31பில்லியனுக்கு வாங்கும் O2

பிரித்தானியாவின் பிரபல தொழில் அதிபர் ரிச்சாட் பிரான்சனின் வேர்ஜின் குழுமம், பெரும் நஷ்டமடைந்துள்ளது. இதில் வேர்ஜின் மீடியா, வேர்ஜின் இன்ரர் நெட் மற்றும் வேர்ஜின் ஏர்வேஸ் நிறுவனம் என்பன கொரோனா காரணமாக பெரும் நஷ்டமடைந்துள்ளது. இன் நிலையில் கம்பெனியை இழுத்து மூடும் அளவுக்கு நிலமை சென்றதால், பல ஆயிரம் பேர் வேலை இழக்க நேரிட்டது. இன் நிலையில் டெலிபோனிக்கா என்ற பெயரில் லண்டனில் இயங்கிவரும் 02 நிறுவனம், வேர்ஜின் மீடியாவை 31 பில்லியன் பவுண்டுகள் கொடுத்து வாங்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டு கம்பெனியா டெலிபோனிக்கா, பல உலக நாடுகளில் பல பெயர்களில் இயங்கி வருகிறது. இன் நிறுவனமே தற்போது வேர்ஜின் மீடியாவை முழுமையாக வாங்கியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. மேலும்…

பிரித்தானியாவில் ஓடும் வேர்ஜின் ரயில் சேவைகள், மற்றும் நஷனல் லாட்டரி(கம-லாட்) ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து லாபம் சம்பாதிப்பதால் அந்த கம்பெனிகளை தொடர்ந்து வேர்ஜின் நிர்வகிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் வேர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனம் என்ன செய்யும் என்பது தெரியவில்லை. சாதாரண தள்ளு வண்டி ஒன்றில் ஐகீரீம் விற்று பிழைப்பு நடத்திய ரிச்சாட் பிரான்சன், பின்னர் ஒரு சினிமா திரையரங்கை வாடகைக்கு எடுத்து படத்தை ஓட்டி காசு சம்பாதித்து. வேர்ஜின் சினிமா திரையரங்கை கட்டி, வேர்ஜின் மியூசிக் கம்பெனியை ஆரம்பித்து. பின்னர் வேர்ஜின் அட்டலாண்டிக் என்ற விமான சேவையை ஆரம்பித்து. பின்னர் வேர்ஜின் மீடியாவை ஆரம்பித்து, அதன் பின்னர் வேர்ஜின் இன்ரர் நெட்டையும் ஆரம்பித்தார். அது போல பல கம்பெனிகள் அவரிடம் உள்ளது.

ஒரு கடின உழைப்பாழி அவர், ஆனால் கொடூரமான இந்த கொரோனா அவரை எங்கே கொண்டு போய் விட்டுள்ளது என்று பாருங்கள்.

Contact Us