முடக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து இரவு வேளை தாக்குதல்; முல்லைத்தீவில் பரபரப்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு ஹிச்சிராபுரம் பகுதிக்கு புகுந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த குழு ஒன்று இரும்பு கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. காணிப்பிணக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சனை அடிதடியில் முடிவடைந்துள்ளது.

முறிப்பினை சேர்ந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். தாக்குதலின் போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

முடக்கப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் கிராம மக்களை அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. முள்ளியவளை பொலிஸ் பிரதேசம் முடக்கப்பட்ட நிலையில் இவர்கள் முறிப்பு பகுதியில் இருந்து வந்து எவ்வாறு தாக்குதல் நடத்தினார்கள் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

Contact Us