ஒரு ட்வீட் போட்ட கொஞ்ச நேரத்துலையே…’ இப்படி ஆகி போச்சே…! – எலான் மஸ்க்-ற்கு ஏற்பட்ட இழப்பு…!

இன்றைய வர்த்தக சூழலில் பங்குசந்தையின் மதிப்பு ஏறிகொண்டும் இறங்கி கொண்டும் இருக்கும். அதுபோல எலான் மஸ்க்கின் ஒரே ஒரு ட்வீட் தான் அவரை பணக்கார பட்டியலில் இருந்தே இறக்க வைத்துள்ளது.

A tweet from Elon Musk has pushed him third richest man

எலான் மஸ்க் நிர்வகித்து வரும் டெஸ்லா நிறுவனம், இந்திய மதிப்பில் 10 ஆயிரம் கோடி (1.5 பில்லியன் டாலர்) ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் வாங்கியது.

அதுமட்டுமில்லாமல், டெஸ்லா தயாரிப்புகளை வாங்க பிட்காயினைப் பயன்படுத்தலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்தது. இதன் காரணமாக அப்போது திடீரென பிட்காயிகளின் மதிப்பு தடாலடியாக உயர்ந்தது.

இந்நிலையில் தற்போது எலான் மஸ்க், மீண்டும் ஒரு எதிர்பாராத அறிவிப்பை தன் ட்விட்டரில் கூறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்த சிறிது நேரத்திலேயே பிட்காயின்களின் மதிப்பு 30 சதவீதம்வரை சரிந்தது. இது எலான் மஸ்க்கிற்கு பெருத்த அடியாக மாறி டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால், டெஸ்லா நிறுவன பங்குகள் சரிய, எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பும் சரிந்தது. அதோடு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த எலான் மஸ்க், 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Contact Us