ஜோர்ஜ் பிளையட் போல மேலும் ஒருவர் கழுத்தை நெரித்து கொன்ற அமெரிக்க பொலிசார் !

வில்லியம் ஜெனட் என்ற 48 வயது நபரை, கைது செய்யும் போது பொலிசார் காலால் நசுக்கியதில் அவர் மூச்சு திணறி இறந்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. 5 பிள்ளைகளின் தந்தையான ஜெனட்டை பொலிசார் டெனசி மாகாணத்தில் வைத்து கைது செய்ய்ய முற்பட்டுள்ளார்கள். அவர் தன்னால் மூச்சை எடுக்க முடியவில்லை என்று கதறிய சத்தம் பொலிசாரின் கமராவில் நன்றாக பதிந்துள்ளது. ஆனால் அதில் இருந்த எந்த பொலிஸ் நபரும் அதற்கு செவி மடுக்கவில்லை. ஏதோ பெரும் தீவிரவாதியை…

கைது செய்வது போல 4 பேர் சேர்ந்து அவரை நசுக்கியே கொலை செய்து விட்டார்கள். அமெரிக்காவின் டெனசி மாகாணத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. இதனை முறையாக விசாரிக்க தற்போது உத்தரவு போடப்பட்டுள்ளது.

Contact Us