உள்ள இருந்த கண்டென்ட் படிச்சதும் வந்த ஆசை…’ – எல்லாம் முடிச்சிட்டு செக் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி…!

நன்றாக படித்தவர்களாக இருந்தாலும் பணம் நிறைய வருகிறது என்றால் அதை குறித்து விசாரிக்காமல் இளைஞர்கள் ஏமாறும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

chennai a girl paid one lakh rupees for an SMS sent

மீண்டும் இதுபோன்ற சம்பவம் தான் கோயம்பேடு பகுதியில் சேர்ந்த இன்ஜினீயர் பெண் ஒருவருக்கு நடந்துள்ளது.

சென்னை கோயம்பேடு பாரதி அவென்யூ பகுதியில் வசிப்பவர் 22 வயதான பெண்மணி பூஜா. இவர் தனது செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்ஸை நம்பி ஒரு லட்சம் ரூபாயைச் செலுத்தி ஏமாந்ததாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

அதில், ‘நான் கொஞ்சம் நாள் முன்பு தான் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடிவருகிறேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடைய செல்போனிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

அதோடு அதில் ஒரு லிங்க்கும் கொடுக்கப்பட்டு, ப்ரோஸஸ் செய்ய அதை கிளிக் செய்யுமாறு குறிப்பிடப்பட்டது.

நானும் அதன் படி கிளிக் செய்யும் போது செல்போன் செயலி ஒன்று டௌன்லோடு ஆனது. அதில் குறிப்பிட்டிருந்தபடி ஆன்லைன் மூலம் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை அனுப்பினேன்.

ஆனால் அதன்பின் அந்த எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிட்டபடி பணம் எதுவும் வரவில்லை. அந்த அப்பை ஓபன் செய்த போது ஓபன் ஆகவில்லை அதன்பின் அந்த லிங்க்கை ஆய்வு செய்தபோது அது மோசடி எனத் தெரியவந்தது.

தயவு செய்து என்னை நூதன முறையில் ஏமாற்றியவர்களைக் கண்டுபிடித்து பணத்தைத் திரும்ப மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பூஜாவிடம் ஆசையை ஏற்படுத்தி பணத்தை நூதன முறையில் ஏமாற்றிய செல்போன் செயலி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஏமாற்று நிகழ்வில் அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் க்ரைமின் போலீஸாரின் உதவியையும் கோயம்பேடு போலீஸார் கேட்டிருக்கின்றனர்.

இது குறித்து அண்ணாநகர் காவல் சைபர் க்ரைம் போலீஸார், ‘இதுபோன்ற கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பணம் தேவைப்படுவோரைக் குறிவைத்து மோசடிக் கும்பல் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றிவருகிறது.

எனவே செல்போன் நம்பருக்கு வரும் எஸ்.எம்.எஸ்., லிங்க்குகளை நம்பி பணத்தைச் செலுத்தி ஏமாற வேண்டாம்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Contact Us