ஊரடங்கை மீறியதாக காவல்துறையினர் தாக்கியதில் 17 வயது சிறுவன் மரணம்; நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது, உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மீறியதாக சிறுவன் மீது காவல்துறையினர் நடத்திய கொடூர தாக்குத்தலில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் முகமது ஃபைசல். கொரோனா ஊரடங்கு காலத்தில் தன் வீட்டுக்கு முன்பு அமர்ந்து காய்கறி விற்று வந்தார். உள்ளூர் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் விஜய் செளத்ரி, சத்ய பிரகாஷ் இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வீட்டிற்கு முன்பு காய்கறி விற்றுக்கொண்டிருந்த முகமது ஃபைசலை காவலர்கள் தாக்கியுள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி சிறுவனை காவலர்கள் தாக்கியுள்ளனர். சிறுவனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். காவலர்களின் தாக்குதலினால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.இதனையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

‘என் மகனை போலீஸ் அடிப்பதாக பக்கத்துக்கு கடைக்காரர் சொன்னபோது தான் எங்களுக்கே தெரியும்.’ என அவரது அப்பா கண்ணீர் வடிக்கிறார். காவல்நிலையத்திலே என் சகோதரர் இறந்துவிட்டார். இறந்த உடலை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என முகமது ஃபைசலின் சகோதரர் குற்றஞ்சாட்டுகிறார்.

17வயது சிறுவன உயிரிழந்ததையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும். ஊர் காவல் படையை சேர்ந்த ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக உன்னாவ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Contact Us