மோதலில் முடிந்த முதலிரவு… சைக்கோ கணவன் செய்த வேலை.. களமிறங்கிய போலீஸ்!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெற்றிவேல் (30). பி.இ., பட்டதாரியான இவருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன் மகள் சூர்யா (24) வுக்கும் கடந்த 17 ம் தேதி புதுவயலில் உள்ள கோயிலில் பெரியோர்கள் முன்னிலையில் கொரோனா ஊரடங்கு எளிமையாக திருமணம் நடந்தது.

இதையடுத்து, அன்று இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், புது மண தம்பதி இருவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியறைக்கு சென்றனர். இருவரும் தங்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளனர். அப்போது புதுமாப்பிள்ளையான வெற்றிவேல் திரைப்படத்தில் கதாநாயகன் கூறுவது போல மனைவி சூரியாவிடம் ‘‘திருமணத்திற்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அதில் தோல்வியடைந்ததாகவும், பெற்றோர்கள் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துள்ளேன். கடைசி வரை உன்னை நல்ல முறையில் காப்பாற்றுவேன்’’ என கடந்த கால பல நினைவுகளை மனம் விட்டு உண்மையாக பேசி உள்ளார்.

இந்நிலையில் புதுப்பெண் சூரியா கணவரை தனியாக உறங்க சொல்லி விட்டு அவரும் அந்த அறையில் தூங்கியுள்ளார். அதி காலை கண்விழித்த வெற்றிவேல் அவரது அப்பாவை எழுப்பி, தன் அறையில் சூர்யா மயங்கி கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் சூர்யாவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து சூர்யாவின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் சூர்யா ‘‘தன் கணவர் சைகோ போல நடந்து கொள்வதாகவும், மேலும் தன்னிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி முடியை வெட்டி, மயக்க மாத்திரை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில், பெற்றோருடன் சூர்யா காரைக்குடி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, இன்று புது மண தம்பதி இருவரையும் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரனை செய்யும் போது பெற்றோர்கள் இரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், காரைக்குடி டி.எஸ்.பி., அருண் புது மண தம்பதி இருவரிடரும் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மணப்பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பிடிக்காத திருமணம் காரணமாக, கணவனை பழிவாங்க திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியதும், மணமகன் நிரபராதி என்பது விசாரனையில் தெரிய வந்தது.

புதுப்பெண் நடத்திய நாடகத்தால் இருதரப்பு பெற்றோரும் என்ன செய்வது என்று புலம்பித் தவித்தனர்.

Contact Us