மோசடிக்காற மடு பிரதேச செயலாளர் நிஜாகரன்; வெளியாகவுள்ள பல ஆதாரங்கள்!

அண்மையில் கீ.பீட் நிஜாகரன் அவர்களை மடு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நியமித்ததை கண்டித்து மக்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த மடு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிஜாகரன் GLASS 2 தகுதியுடையவர், அப்படியிருக்கும் அவர் வேறெங்கும் உதவி பிரதேச செயலாளராககூட பதவி வகிக்கவில்லை அப்படியிருக்கும் போது GLASS 1-க்குரிய இந்த மடு பிரதேச செயலகத்தில் எப்படி நியமிக்கப்பட்டுள்ளார்.

அது தவிர இவர் அரச ஊழியராக பதவி வகித்துக்கொண்டிருக்கிற நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில், தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருக்கு தேர்தல் பணிகளை மேற்கொண்டிருந்தார், குறித்த பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ், மற்றும் அவரது ஆதரவாளர்களும் முல்லைத்தீவிற்குக்கு செல்லும்போதெல்லாம் இவர் வீட்டில்தான் தங்குவார், அங்கு தங்கியிருந்து வடி எனப்படும் கள்ளச்சாராயம் குடித்தல், தடை செய்யப்பட்ட மிருகங்களை வேட்டையாடி உண்பதும் என பல அட்டுழியம் செய்வார்களென அயலவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தவிர சாள்ஸ் மற்றும் மன்னார் ஆயரின் சிபாரிசுகளிலேயே பூரண தகுதியற்ற இவரை கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் மடுவிற்கு பிரதேச செயலாளராக நியமித்துள்ளார்கள், இது ஒரு மதவாத அடிப்படையிலான செயல், பிரதானமாக பெரியபண்டிவிரிச்சான் விவசாயிகளின் கோயில்மோட்டை காணிகளை பறித்து பங்குத்தந்தைகள் எடுத்துக்கொள்ளவே இவரை பிரதேச செயலாளராக நியமித்துள்ளனர் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுத்துறை உறுப்பினரெனவும், தளபதி மாதவன் மாஸ்டரின் கீழ் இவர் இருந்தவரெனவும் அந்த காலத்தில் இவருக்கான அரச பரீட்சைகளை முன்னாள் போராளி ஒருவர்தான் எழுதியிருக்கிறார், (SLAS பரீட்சையில் கூட இவர் அரசியல் செல்வாக்கை வைத்து மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது) பின் காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் நிதி மோசடியில் ஈடுபட்ட நிலையில் இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தண்டனைக்குட்பட்டு பிற்காலத்தில் விடுவிக்கப்பட்டார் என தற்போது முன்னாள் போராளி ஒருவர் முகநூலில் வெளியிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட மோசடி காரரை பிரதேச செயலாளராக பெற்றிருக்கின்றோம், எனவே இவரை உடனடியாக மாற்றம் செய்து புதிய தகுதியுடைய நேர்மையான பிரதேச செயலாளரை நியமிக்குமாறு மடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல மோசடிகளில் ஈடுபட்ட மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன் அவர்கள் தொடர்பான மேற்குறிப்பிட்ட அனைத்து ஆதாரங்களையும் இம்மாத இறுதியில் வெளியிட இலங்கை தமிழ் ஊடகங்கள் முடிவு செய்துள்ளன.

Contact Us