ரயன் ஏர் விமானத்தை மிக் 29 போர் விமானம் கொண்டு தரையிறக்கிய பெலருஸ்- ஏன் எனில் பத்திரிகையாளரை கைது செய்ய !

பெலருஸ் நாடு, ரஷ்ய நாட்டின் செல்லப் பிள்ளை. அங்கேயும் சர்வாதிகார ஆட்சியே இடம்பெற்று வருகிறது. அன் நாட்டு அரசைப் பற்றி 26 வயதுடைய பத்திரிகையாளர் றோமன் புரோட்டோவிச் பல கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். பெலருஸ் அரசுக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார். இதனை அடுத்து இவரை எப்படி என்றாலும் கைது செய்யவேண்டும் என்று பெலருஸ் அரசு தவித்து வந்தது. இன் நிலையில் ரயன் ஏர் விமானம் மூலம் அவர் கிரீஸ் நாட்டில் இருந்து லித்வேனியா சென்று கொண்டு இருந்தார். விமானம் பெலருஸ் நாட்டை கடந்து சென்றவேளை. விமானத்தில் குண்டு இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று பொய்யாகக் கூறி…

மிக்29 ரக போர் விமானங்களை பெலருஸ் நாடு அனுப்பி. வானில் வைத்து ரயன் ஏர் விமானத்தை மிரட்டி தரையிறக்கியுள்ளார்கள். விமானத்தில் எந்த குண்டும் இருக்கவில்லை. இதேவேளை அந்த ஊடகவியலாளரை பொலிசார் திடீரென கைது செய்து தமது நாட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். இதனை பிரித்தானியா உட்பட பல நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளது. குறித்த ஊடகவியலாளருக்கு மரண தண்டனையை பெலருஸ் வழங்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

Contact Us