நாடு சுடுகாடாக இருக்கு.. இந்திய- சீன எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதல்?

இந்தியா- சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்கள் எல்லையை கடந்து வந்த பிர்ச்சினையில் நேருக்குநேர் மோதிக்கொண்டனர். ஆயுதங்கள் இல்லாமல் கற்கள், இரும்பு கம்பிகள் கொண்டு பயங்கரமான தாக்கினர்.

இதில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதன்பின் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல இருநாட்டு அதிரிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

அதன்பின் எல்லையில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கினர். இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருநாட்டு ராணுவ வீரர்கள் லேசான கைகலப்பில் ஈடுபட்டதாக மீடியாக்களில் செய்திகள் கசிந்தன. அந்த செய்தியில் ‘‘இரு நாட்டு பேச்சுவார்த்தையில் ராணுவ வீரர்கள் பின் வாங்கினர். அதன்பின் அந்த இடத்தில் பாதுகாப்பிற்கு வீரர்கள் அமர்த்தவில்லை. இரு நாட்டு வீரர்களும் எல்லையை தாண்டி முன்னோக்கி வந்துள்ளனரா? என்பதை கண்காணிக்க அவ்வப்போது சென்று பார்வையிடுவார்கள்.

ஒருநாட்டின் வீரர்கள் செல்லும்போது மற்றொரு நாட்டின் வீரர்கள் செல்லக்கூடாது. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் இருநாட்டு வீரர்களும் ஒரே நேரத்தில் சென்றுள்ளனர். இதனால் லேசான கைகலப்பு நடந்துள்ளது. ஆனால் உடனடியாக அவர்கள் பின்னோக்கி சென்று விட்டார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்திய ராணுவம் அப்படி எந்த சம்பவம் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த செய்தி மூலம் கிழக்கு லடாக் பிரச்சினைகளை முன்கூட்டியே தீர்ப்பதற்கான தற்போதைய செயல்முறையைத் தடம் புரள முயற்சிப்பதை ஈர்ப்பதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

Contact Us