நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்..! அமெரிக்காவில் திட்டமிட்ட திகில் கொலை..!

நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் பெண் ஜெயபாரதி. இவர் திருவாரூர் அருகே உள்ள கிடாரங் கொண்டான் என்ற கிராமத்தை சேர்ந்தவர். 2005 இல் இவருக்கு அமெரிக்காவில் வேலைபார்த்த விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னர் ஜெயபாரதி தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

திருமணத்திற்கு பின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயபாரதி தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு திருவாரூரில் உள்ள தனது தாய் போட்டுக்கொண்டு வந்துவிட்டார். மேலும், இவரது கணவர் தான் இவரை தாய் வீட்டிற்கு திட்டி அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஜெயபாரதி சொந்த ஊரிலேயே தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பிய போது ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வாகனம் மோதி உடல்நசுங்கி உயிரிழந்துள்ளார் இது தொடர்பாக போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜெயபாரதியை திட்டமிட்டு சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக ஆதாரத்துடன் அவரது சகோதரர் போலீசாரின் புகார் அளித்தார்.

நடிகர் சந்தானத்தின் உதவியால் மாவட்ட காவல் கண்காணிப்பளர் கவனத்துக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தர்போது இந்த வழக்கு இது விபத்து அல்ல திட்டமிடப்பட்ட கொலைச் சம்பவம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

கொல்லப்பட்ட ஜெயபாரதி , கணவர் விஷ்ணு பிரகாசை பிரிந்து வாழ்ந்து வந்தார். அமெரிக்காவில் வசிக்கின்ற அவரது கணவர் விஷ்ணுபிரகாசுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதனால் விஷ்ணுபிரகாஷ் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது மனைவி ஜெயபாரதியை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். இதை தொடர்ந்து தனது உறவினர்களான ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார்.

அதன்படி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால் விபத்து என்று வழக்கை முடித்து விடுவார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி பவித்திரமாணிக்கத்தை சேர்ந்த செந்தில் குமார் பழைய சரக்கு வேன் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். வாகனத்திற்கு டிரைவராக பிரசன்னா என்பவர் இருந்துள்ளார்.

இந்த வாகனம் ஒரு நாள் முழுவதும் ஜெயபாரதியைத் பின் தொடர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் வேலைக்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. பின்னர் அவர் எப்போது, எந்த வழியாக வருவார் என எதிர்பார்த்து மோதினால் விபத்து என்று எல்லோரும் நம்பும் படியாக இருக்கும் இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

அதன்படி பணிமுடிந்து மொபட்டில் வீடு திரும்பிய ஜெயபாரதி மீது வாகனத்தை மோதியதோடு நிற்காமல் எதிரில் நின்ற பனைமரத்துடன் அவர் உடல் நசுங்கும் அளவுக்கு கொடூரமாக வாகனத்தை இயக்கி உள்ளனர். அதன் பின்னர் ஜெயபாரதியின் சடலத்தை அங்கிருந்து எடுத்து வந்து சாலையில் கிடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதையடுத்து கொலைக்கு மூளையாக இருந்த வாகன உரிமையாளர் செந்தில்குமார், ஓட்டுனர் பிரசன்னா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொடூர கொலைக்கு அமெரிக்காவில் இருந்தபடியே திட்டம் தீட்டிக் கொடுத்த ஜெயபாரதியின் கணவர் விஷ்ணுபிரகாஷ் சில லட்சங்களை முன் பணமாக அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுவதால் அது குறித்தும் விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணுபிரகாஷ் கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.

விஷ்ணு பிரகாஷின் கொலை திட்டம் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்தியதூதரகத்துக்கு தெரிவித்து அவரை தமிழகம் வரவழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Contact Us