வேலைய விட்டு தூக்கிட்டாங்க ஐயா…! ‘TAG பண்ணின பத்தே நிமிஷத்துல…’ – அமைச்சரிடம் இருந்து வந்த பதில்…! வேற லெவல் ஸ்ராலின் ஆட்சி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் சூழலில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

young man lamented Twitter losing job replied minister

மளிகை கடைகளும் மூடியுள்ள நிலையில் காய்கறி விநியோகம் அரசு மூலமே மக்களுக்கு கிடைக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது

அதோடு அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளித்ததோடு, ஊழியர்களை தொழிற்சாலைகளின் வாகனங்களிலேயே அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், இரு சக்கர வாகனங்களில் ஆலைகளுக்கு வரவழைக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணிபுரிவோர் உபயோகிக்கும் வாட்ஸ் அப் குரூப் உரையாடலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ட்விட்டர் பயனர் ஒருவர் ஊழியரின் ட்வீட்டை பகிர்ந்து அதை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் tag செய்திருந்தார்.

 

இது குறித்து அறிந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பத்தே நிமிடங்களில் பதிலளித்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த விவகாரத்தை எனது பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரின் இந்த உடனடி பதிலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Contact Us