அப்ரிடிக்கு ‘மருமகன்’ ஆகப் போகும் இளம் வேகப்பந்து வீச்சாளர்.. வெளியான அசத்தல் தகவல்..!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shahid Afridi opens up on daughter\'s wedding with Pakistan pacer

Shahid Afridi opens up on daughter's wedding with Pakistan pacer

ஷாகித் அப்ரிடிக்கு அக்ஷா அப்ரிடி, அன்ஷா அப்ரிடி, அஜ்வா அப்ரிடி, அஸ்மரா அப்ரிடி, அர்வா அப்ரிடி என்ற ஐந்து மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான அக்ஷா அப்ரிடியை, பாகிஸ்தான் அணியின் 21 வயது வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷாவிற்கு திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shahid Afridi opens up on daughter's wedding with Pakistan pacer

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அப்ரிடி, ‘ஷாஹீன் ஷாவின் குடும்பத்தினர் என்னுடைய குடும்பத்தினரை அணுகி இந்த திருமணம் குறித்து பேசினர். இரண்டு குடும்பத்திற்கும் சம்மதம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்ய வேண்டும் அல்லாஹ் விரும்பினால் அது நன்றாக நடக்கும். ஷாஹீன் ஷா தொடர்ந்து கிரிக்கெட்டிலும், வெளியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Contact Us