கொரோனாவால் இறந்த தந்தையின் உடல் வேண்டாம் என்ற மகன் சேமிப்பு பணம் 6 லட்சத்தை கேட்டு அடம்பிடித்தார்!

கர்நாடக மாநிலம் மைசூரு ஹெப்பாள் பகுதியில் வசித்து வந்தவர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இந்த தகவலை கவுன்சிலர் ஸ்ரீதர் இறந்தவரின் மகனுக்கு போன் செய்து உனது தந்தை இறந்துவிட்டார். அவரது உடலை பெற்றுக் கொள் ளுங்கள் என்று கூறி உள்ளார்.

இதற்கு மறுப்பு தெரித்த மகன் நீங்களே இறுதி சடங்கு செய்துவிடுங்கள் என்று கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து உனது தந்தையிடம் 6 லட்சம் சேமிப்பு பணம் உள்ளது என்று கூறிய போது அந்த பணத்தை மட்டும் என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள் என்று கேட்டு அடம் பிடித்துள்ளார்.

கொரோனாவால் இறந்த தால் தந்தையின் உடலை பெற மறுத்த மகன் அவரது பணத் துக்கு மட்டும் ஆசைப்பட்டு கேட்ட மனதாபிமானமற்ற செயலால் வளர்த்த தந்தையே உறவினர்கள் இருந்தும் அனாதை பிணமாக மாறியது.

இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது. கொரோனா கோர தாண்டவத்தால் பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. உறவினர்கள் இருந்தும் இறந்தவர்களுக்கு அனாதைகள் போல் இறுதி சடங்கு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

Contact Us