பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை கரம் பிடித்த போலீஸ்காரர்; நீதானய்யா மனுஷன்!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.பணியில் துடிப்புடன் செயல்பட்ட இவர் பேஸ்புக் வலைதளத்தில் கணக்கு தொடங்கி அதில் செயல்பட்டு வந்தார். பல்வேறு கருத்துகளை அதில் பதிவிட்டு வந்தார்.இதனால் அவருக்கு ஏராளமான பேஸ்புக் நண்பர்கள் இருந்தனர். அவரது கருத்தால் இளம்பெண்களும் கவரப்பட்டு நண்பர்களாக இணைந்தனர்.

இந்த நிலையில் அவருக்கும் பத்தனம் திட்டாபகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் பேஸ்புக்கில் காதல் மலர்ந்தது. இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர்.பல்வேறு இடங்களுக்கும் சுற்றித் திரிந்தனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணிடம் அந்த போலீஸ்காரர் திருமண ஆசை காட்டி ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பணம் மற்றும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை வாங்கியுள்ளார். பின்னர் அவர் மாயமாகி விட்டார். அவரை இளம்பெண் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் பத்தனம்திட்டா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் மீது ஆசை வார்த்தை கூறி மோசம் செய்துவிட்டதாக புகார் தெரிவித்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே அந்த போலீஸ்காரர் இளம்பெண்ணின் வக்கீலை தொடர்பு கொண்டார்.அப்போது அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதையடுத்து அந்த பெண் புகாரை வாபஸ் வாங்கினார்.இந்த நிலையில் இளம்பெண்ணை அந்த போலீஸ்காரர் திருமணம் செய்து கொண்டார்.உறவினர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

Contact Us