சீனாவின் புத்தம் புதிய H20 ஸ்டெலத் விமானம்: அமெரிக்க தளங்களை நொடியில் அழிக்க வல்லவை என எச்சரிக்கை !

சீனா தனது H20 என்று அழைக்கப்படும் அதி நவீன ஸ்டெலத் விமானத்தை தயாரித்து, அதனை வெள்ளோட்டாம் விட்டுள்ளது. மிகை ஒலி வேகத்தில் பறக்கும் இந்த ஸ்டெலத் விமானத்தில் அணு குண்டுகள் உள்ளதோடு. இவை எந்த ஒரு ராடர் திரைகளிலும் சிக்காது என்பது சிறப்பு அம்சமாகும். பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு அப்பால் உள்ள குவாம் தீவுகளில் உள்ள அமெரிக்க தளங்களை இந்த விமானம் இலகுவாக தாக்கி அழித்து விடும் என்று கூறப்படுகிறது. போர் என்று ஒன்று ஆரம்பித்தால். அமெரிக்கா சீன நாட்டுக்கு அருகில் உள்ள தளங்களில் இருந்து தான் வளங்களை முன் நகர்த்த வேண்டி இருக்கும். ஆனால் அந்த குறிப்பிட்ட தளங்களை அழிக்க…  (VIDEO கீழே உள்ளது)

ஏதுவாக இந்த விமானம் உள்ளதாக, அமெரிக்க புலனாய்வு துறை அமெரிக்க அரசுக்கு அறிவித்துள்ளது. எனவே சீனா தயாரித்துள்ள இந்த H20 என்னும் ஸ்டெலத் போர் விமானங்களை தாக்குப் பிடிக்கும் விமான எதிர்ப்பு சக்தி ஆயுதங்களை அமெரிக்கா தயாரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. சகல நாடுகளும் கொரோனா பீதியில் உள்ள இந்த வேளையில். சீனா மட்டுமே ராணுவ மற்றும் வான் படை ஆயுதங்களை பெருக்கிக் கொண்டு வருகிறது என்பது மிகவும் ஆபத்தான விடையமாக உள்ளது.

Contact Us