பெலருஸ் நாட்டு விமானம் பிரிட்டன் மேல் பறக்க தடை- லண்டன் வரவும் முடியாது !

பெலருஸ் நாட்டு விமானங்கள் பிரித்தானியாவின் மேல் பறக்க இன்று(26) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெலருஸ் விமானங்கள் வேறு வழிகளை பாவிக்க வேண்டிய மற்றும் நீண்ட தூரம் சென்று தனது இலக்கை அடைய வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பெலரூஸ் நாட்டு பயணிகள் விமானக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இவை அனைத்தும் நடக்க காரணம், ரயன் ஏர் விமானத்தை மறித்து தனது நாட்டில் தரையிறக்கி. அதிபரைப் பற்றி எழுதிய றோமன் என்ற ஊடகவியலாளர் மற்றும் அவரது காதலி ஆகியோரை ராணுவம் கைது செய்துள்ளது.

இதன் காரணத்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரிட்டன் போல பயணத் தடைகளை கொண்டு வரலாம். அவ்வாறு 25 நாடுகளும் பயணத் தடையைக் கொண்டு வந்தால், பெலரூஸ் நாட்டு விமானம் எங்குமே பறக்க முடியாத நிலை தோன்றும்.

Contact Us