சுற்றுலாவால் வரும் பெரும் பணம் அம்பேல் .. இலங்கை செல்லவேண்டாம்- அமெரிக்கா கடும் எச்சரிக்கை- .

ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த 2 நாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என்று தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ஜப்பான் செல்ல வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இலங்கை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

மேலும், ஜப்பானில் தற்போதைய நிலவும் சூழலில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Contact Us