சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.. வெளியான புதிய தகவல் வெளியானது !

சுவிட்சர்லாந்தில் நடக்கப்போகும் மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் சந்திக்கவுள்ளார்கள். வரும் ஜூன் மாதத்தில் 16ஆம் தேதி அன்று ஜெனீவாவில் இவர்களின் சந்திப்பு நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் பாதுகாப்புப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பெடரல் காவல்துறை அலுவலகம் தான் இந்த சந்திப்பிற்கு பொறுப்பு. எனினும் ஜெனீவாவின் மாகாண பாதுகாப்பு படை தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மும்முரமாக கவனிக்கவுள்ளார்கள். மேலும் ஜோபைடன், ஜனாதிபதியான பின்பு அதிபர் புடினை முதன்முதலாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us