வெளிநாட்டில் இருந்தபடியே இளம் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன் இவர் தான் !

நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் ம.ரணத்தில் அதிரடி திருப்பமாக சினிமா பாணியில் வெளிநாட்டில் இருந்தபடியே மனைவியை கணவன் கொலை செய்துள்ள விடையம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

தமிழகத்தின் திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் சரக்கு வாகனம் மோதி சமீபத்தில் உ.யிரிழந்தார். இதை பொலிசார் விபத்தாக கருதிய நிலையில் ஜெயபாரதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்தனர். பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானத்தில் உறவினர் தான் ஜெயபாரதி. இதை தொடர்ந்து சந்தானத்தின் உதவியால் மாவட்ட காவல் கண்காணிப்பளர் கவனத்துக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் விசாரணையில் அதிரடி திருப்பமாக ஜெயபாரதி திட்டமிட்டு கொலை செய்யயப்பட்டதும், அமெரிக்காவில் இருந்துகொண்டே அவர் கணவர் விஷ்ணுபிரசாத் இந்த வேலையை செய்ததும் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட ஜெயபாரதி , தன்னை பிரிந்து அமெரிக்காவில் வசிக்கின்ற தனது கணவர் விஷ்ணுபிரகாஷுக்கு அனுப்பிய நோட்டீசால் அவர் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு தலைவலியாக மாறிப்போன ஜெயபாரதியை தீர்த்துக்கட்ட தனது உறவினர்களான ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சரக்குவாகனம் மோதி உயிரிழந்தால் இதை விபத்து போல காட்டிவிடலாம் என கணக்கு போட்டு உறவினர்கள் மூலம் ஜெயபாரதி மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய வைத்துள்ளார் விஷ்ணுபிரகாஷ். இந்த கொலைக்காக சில லட்சங்களை முன்பணமாக அமெரிக்காவில் இருந்து அவர் அனுப்பியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை பொலிசார் தேடிவருகின்றனர்.

Contact Us