ஆஸ்ரா செனிக்கா போட்டால் ஏன் ரத்தம் உறைகிறது- கண்டு பிடித்த ஜேர்மன் மருத்துவர்கள் FIX பண்ணலாம் என்கிறார்கள்

பிரிட்டன் தயாரிப்பான ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசியை எடுத்த பலருக்கு, ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில் ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசிகளை மக்கள் போட தயங்கி வருகிறார்கள். இன் நிலையில் இந்த தடுப்பூசி ஏன் சிலரது உடலில் ரத்த உறைவை ஏற்படுத்துகிறது என்பதனை தாம் துல்லியமாக கண்டறிந்துள்ளதாக ஜேர்மன் மருத்துவர்கள் தற்போது தெரிவித்துள்ளதோடு. அதனை தெளிவு படுத்தியும் உள்ளார்கள். மேலும் சொல்லப் போனால் இதனை சரி செய்ய முடியும் என்றும்..

ஜேர்மன் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில். ஆஸ்ரா செனிக்கா தடுப்பு ஊசிகளில் என்ன மாற்றத்தை செய்ய வேண்டும் என்பதனை ஜேர்மன் மருத்துவர்கள் அன் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்கள். இதன் அடிப்படையில் தடுப்பூசியை தயாரித்தால் ரத்த உறைவும் 99 விகிதம் வராது என்று கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது போல, சில மருந்தை எடுக்காமல் தட்டிக் கழித்து வந்தார்கள். அவர்களுக்கு இனி நல்ல தரமான ஆஸ்ரா செனிக்கா கிடைக்கவுள்ளது.

Contact Us