கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த கப்பலின் நிலை தொடர்பில் வெளியான புதிய செய்தி!

கொழும்பு துறைமுகம் அருகே தீப்பிடித்து எரிந்த கப்பலின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இந்த கப்பலில் நெருப்பு முழுமையாக அணைக்கப்பட்டதாகவும், எனினும் முற்றிலும் கருப்பு புகை மண்டலமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று பிற்பகல் ட்விட்டர் செய்தியில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கப்பலின் தீயைக் கட்டுப்படுத்த இந்தியாவும் இலங்கையும் ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Contact Us