கிளர்ச்சியாளர்கள் மக்கள் மீது தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!

பெரு நாட்டிலிருக்கும் ஜூனின் என்ற மாகாணத்தில் ஷெரிங் பாத் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இயங்கி வருகிறது. இவர்கள் அந்நாட்டின் அரசை எதிர்த்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஜூனின் மாகாணத்தில் இருக்கும் விஸ்கடின் டெல் என்ற மாவட்டத்தில் திடீரென்று ஷெரிங் பாத் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் குழந்தைகள் உட்பட 16 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் நாட்டில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. எனவே கிளர்ச்சியாளர்கள் அரசை எதிர்த்து  தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து மாகாணத்தில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

Contact Us