நடிகைகளின் சம்பள பட்டியல்.. ஹீரோக்களை விட அதிகமாக துட்டு வாங்கும் உச்ச நடிகை

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலரும் நாளுக்கு நாள் தங்களது சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். படம் வெற்றி பெறுகிறதோ வசூல் அடைகிறதோ என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் நாளுக்குநாள் தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள்.

 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனாலேயே நயன்தாரா தற்போது 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நம்மளோட சில ஹீரோக்கள விட அதிகமான சம்பளம்.

அதற்கு அடுத்தபடியாக சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் சமந்தா தற்போது கைவரிசையாக பல படங்கள் வைத்துள்ளார். தெலுங்கில் இவருக்கு அதிகமான சினிமா மார்க்கெட் இருப்பதால் சமந்தா 3 கோடி 50 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார்.  அனுஷ்கா நடிப்பில் தமிழில் எந்த ஒரு படமும் சமீபத்தில் வெளியாகவில்லை. ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மற்ற நடிகைகளை பார்த்து இவரும் தற்போது 3 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் சமீபமாக எந்த படமும் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. அதனாலேயே எப்படியாவது சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சி களத்தில் குதித்தார். இவரும் 3 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பலரும் மேடம் அந்த அளவுக்கு நீங்க பெரிய ஆளு கிடையாது. உங்கள் படமும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை பின்பு எதற்கு இவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

காஜல் அகர்வால் கைவசம் 7 படங்கள் வைத்துள்ளார் .இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் மற்றும் கில்ஆச்சார்யா ஆகிய படங்கள் நடித்துள்ளார். இவர் தற்போது 2 கோடி சம்பளம் வாங்குகிறார். இவருக்கு இணையாக திரிஷாவும் 2 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

Contact Us