கொரோனா தடுப்பூசி போட ரெடியா’?… ‘உங்களுக்கு பெரிய ஜாக்பாட் காத்துட்டு இருக்கு’… அதிரடியாக அறிவிப்பு!

மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க கலிபோர்னியா மாகாணம் பம்பர் பரிசு தொகையை அறிவித்துள்ளது.

California launches largest US Covid vaccine lottery yet with 1.5m

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்தும் அடுத்த மாதம் முதல் வெளியேற முடிவு செய்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கப் பரிசு திட்டத்தை கலிபோர்னியா மாகாணம் அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் தடுப்பூசி பெறத் தகுதியான 34 மில்லியன் மக்களில் இதுவரை 63% மக்கள் மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். தொடர்ந்து தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்களின் ஆர்வம் குறைந்து காணப்படுவதாக ஒரு ஆய்வு மூலம் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

California launches largest US Covid vaccine lottery yet with 1.5m

இதனால் ஜூன் 15ல் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவு செய்துள்ள நிலையில், அதே நாளில் தெரிவாகும் 10 பேர்களுக்கு தலா மில்லியன் டொலர் பரிசளிக்க உள்ளனர். இரண்டாவது பரிசாக 30 பேர்களுக்கு தலா 50,000 டொலர் தொகை அளிக்க உள்ளனர். இந்த 40 பேர் பட்டியலில் இடம் பெறாத 2 மில்லியன் மக்களுக்கு தலா 50 டாலருக்கான பரிசு அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

முன்னதாக ஓஹியோ மாகாணம் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசளித்துள்ளது. கொலராடோ மற்றும் ஓரிகான் மாகாணங்களும் 1 மில்லியன் டொலர் பரிசுகளை வழங்கியுள்ளன. தற்போது நாட்டிலேயே கலிபோர்னியா மாகாணத்தில் தான் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மிக அதிக தொகையைப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us