மச்சி உன் போட்டோவை யாரோ லீக் பண்ணி இருக்காங்க டா’… ‘பதறியடித்து இன்ஸ்டாகிராமை பார்த்த இளைஞர்’… நீயா இந்த வேலையை பாத்த, சுக்குநூறான மனசு!

ஒருவரைப் பழிவாங்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் ஒருவரின் மனது எவ்வளவு வக்கிரமாக யோசிக்கும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.

Wife creates Instagram accounts of estranged husband, posts his nudes

Wife creates Instagram accounts of estranged husband, posts his nudes

இதையடுத்து இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் அந்த இளைஞரின் நண்பர் ஒருவர் கதறியடித்துக் கொண்டு அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது பேசிய அந்த நபர், உன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் லீக் ஆகி இருப்பதாகவும், அதில் பல புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ந்துபோன அந்த இளைஞர் உடனே இன்ஸ்டாகிராமுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த இளைஞரின் பெயரிலேயே ஒரு  இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் அந்த இளைஞரின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ந்து போனார். இதையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் தெரிவித்தார்.

Wife creates Instagram accounts of estranged husband, posts his nudes

அவர்கள் நடத்திய விசாரணையில் யார் இந்த செயலை செய்தது என்பது தெரிய வந்தது. அது வேறு யாரும் அல்ல, அந்த இளைஞரின் மனைவி தான் இந்த பகிர் சம்பத்தில் ஈடுபட்டுள்ளார். கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் படி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவரின் பெயரில் பல அக்கவுண்ட்களை ஓபன் செய்துள்ளார்.

Wife creates Instagram accounts of estranged husband, posts his nudes

அதன் பின், அதில் கணவனின் ஆபாச புகைப்படங்களைப் பதிவிட்டு வந்துள்ளார். திருமணம் ஆன புதிதில், கணவனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவர் மட்டும் இருக்கும் புகைப்படங்களைப் பதிவு செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது  செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியே கணவனைப் பழிவாங்க இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us