வெளிநாட்டு பெண்ணுக்கு இந்தியாவில் நடந்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ – பயங்கர சம்பவம்!

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்யும் வீடியோ ஒன்று வட இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் சுற்றி வந்துள்ளது. அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் இந்த வீடியோவானது பரவியுள்ளது. இந்த விவகாரத்தில் அசாம் காவல்துறையினர் களத்தில் இறங்கினர். குறிப்பிட்ட வீடியோவில் இருந்த ஆண்களின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு அந்த நபர்களின் விவரங்களை சேகரிக்கத் தொடங்கினர். அந்த வீடியோ எந்த எண்ணில் உள்ள செல்போனில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற விவரங்களை போலீஸார் சேகரித்தனர். ஒரு கட்டத்தில் அந்த மொபைல் எண் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பெங்களுரூ போலீஸார் அலர்ட் செய்யப்பட்டனர். ஸ்பெஷல் டீம் அந்த எண்ணை ட்ரேஸ் செய்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றது. அதிகாலையில் அந்த கும்பலை சுற்றி வளைத்த போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். நாங்கள் கூலித்தொழிலாளர்கள் என அந்தக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். அவர்களை கைது செய்த போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சாகர், முகமது பாபா சேக், ரிடோய் பாபு, ஹகில் மற்றும் ஒரு பெண் ஆகிய 5 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த கும்பல் வங்கதேசத்தில் இருந்து திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இவர்கள் அனைவரும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்கதேசத்தை சேர்ந்தவர். வேலை வாங்கித் தருவதாக கூறி அந்தப்பெண்ணை நாடு கடத்தி வந்தியுள்ளனர். முறையான ஆவணங்கள் இன்றி அந்தப்பெண் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அந்த இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபட அந்த கும்பல் வற்புறுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து செல்ல முயன்ற பெண்ணை அடித்து துன்புறுத்தி அந்த வீடியோவை எடுத்துள்ளனர். அதனை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தான். போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற இருவருக்கு குண்டு அடி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை அண்டை மாநிலங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை அழைத்துவர ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரை அழைத்துவந்த பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெறப்படும்.” என்றனர்.

Contact Us