இளம்பெண் கொலையில் பழிக்குபழி: பட்டப்பகலில் டாக்டர் தம்பதிகள் சுட்டுக் கொலை; பதற வைக்கும் வீடியோ!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் தம்பதிகள் சுதீப் குப்தா அவரது மனைவி சீமா குப்தா  இவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள பாரத்பூரில்  காரில் சென்று கொண்டிருந்தனர்.  இருவரையும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் காரை மடக்கி நிறுத்தினர். அதிலிருந்து இறங்கிய ஒருவன் சில நொடிகளில் டாக்டரையும் அவர் மனைவியையும் மிக நெருக்கத்தில் நின்று 5 முறை சுட்டுத் தள்ளினான்.  இதில்  டாகடர் தம்பதிகள் அதே இடத்தில் பலியானார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீபா தேவி  என்ற 25 வயது இளம் பெண்ணையும் அவளது 6 மாத குழந்தையையும் கொலை செய்த வழக்கில் இந்த டாக்டர் தம்பதிகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களை மிக விரைவில் கைது செய்வோம்,என பரத்பூர் வட்ட அதிகாரி (நகர) சதீஷ் வர்மா தெரிவித்தார்.

Contact Us