ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டியமை திட்டமிட்ட செயல்; ஆதாரத்துடன் தகவல்?

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என திட்டமிடப்பட்டு பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது என தமிழ்த் தேசியவாதியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

படுகொலை வழக்கில் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதில் 13 இந்தியத் தமிழர்கள், 13 ஈழத்தமிழர்கள். திட்டமிடப்பட்ட ஒரு கொலைச் சதியில் சரிசமமானவர்கள் இருந்துள்ளார்கள் என்பது நம்பமுடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Contact Us