அனகொண்டா மீது பாஜக அக்கா பரபரப்பு பாலியல் புகார்; பெண்களை விடுறானில்லை!

’உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக உண்மையில் பெண்கள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள்’ என நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் நடிகர் விஷால் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு, ஆசிரியர் ராஜகோபால் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கடந்த சில தினங்களாக பெரும் எதிர் வினைகளைப் பெற்று வருகிறது. இதே போல் மற்ற பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் மீண்டும் கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகாரை சமூக வலைதளங்களில் உயிர்ப்பித்திருக்கிறார் பாடகி சின்மயி.

இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷால், “PSBB-ன் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைக்கிறது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோரிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை, இதுபோன்ற குற்றங்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

நான் எனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வலுவான நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் காயத்ரி ரகுராம், “சினிமா துறையில் இருக்கும் நீங்கள் முதலில் அங்கு நடக்கும் துன்புறுத்தல்களை கண்டியுங்கள். புதிதாக இத்துறைக்குள் நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் விஷால். பெண் முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். பயன்படுத்தி தூக்கி எறிய, நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே இடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திரைப்பட தொழில்துறை பெண்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும்போது நீங்கள் உங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும். யதார்த்தத்தை சரி பார்க்கவும். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக உண்மையில் பெண்கள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் தெருவித்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் சமூக வலைதலங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

Contact Us