சித்தப்பாவிடம் மன்னிப்பு கேட்ட நாமல்; நீங்களே வைப்பீர்களாம் நீங்களே எடுப்பீர்களே!

மொரட்டுமுல்ல பிரதேசத்தில் தடுப்பூசி வழங்கும் வேலைதிட்டத்தில் மொரட்டுவ கல்கிஸ்ஸ நகர சபையின் நகர முதல்வரின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, இந்த விடயம் தொடர்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் விஞ்ஞான ரீதியாகவே ஒவ்வொரு இடங்களை தெரிவு செய்து தடுப்பூசி வழங்குகின்றோம். அப்படி செய்யும் போது மொரட்டுவ சம்பவம் தவறாக இருந்தது. அப்படி செய்வதற்கு இடமளிக்க கூடாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி மன்னிக்க வேண்டும், அது எதிர்பாராத சம்பவம் என நாமல் குறிப்பிட்டுள்ளார். எனக்கு தெரியும். அப்படி நடக்க இடமளிக்க வேண்டாம். எல்லா இடங்களிலும் உரிய முறையில் இடம்பெற்றது.

Contact Us