திங்கள் பாங்- ஹாலிடேயோடு கொரோனா தொற்று மேலும் பன் மடங்காக அதிகரிக்கப்போகிறது !

கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில். இன்று ஞாயிறு மற்றும் நாளை திங்கட் கிழமை ஆகிய தினங்களில் லட்சக் கணக்கான மக்கள்
கடல்கரைகளை நோக்கிப் படை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். வங்கி விடுமுறை என்பதனால் பலர் கடல்கரைகளை நோக்கிச் செல்வதனால், அடுத்த வாரம் அளவில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்க
வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மக்களோ..

கேட்டபாடாக இல்லை. எதனையும் கருத்தில் கொள்ளாமல் குடும்பத்தோடு அவர்கள் மக்கள் கூடும் இடங்கள் நோக்கி சென்று வருகிறார்கள். இதன் காரணத்தால் கொரோனா பரவல் சில மடங்காள் அதிகரிக்க
வாய்ப்புகள் உள்ளது.

Contact Us