இந்தியாவிடம் வேறுவழியின்றி அடிபணிந்த உலகின் முக்கிய நிறுவனங்கள்!

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது.இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ந் தேதிக்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது.

ஏதேனும் புகார் வரும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனறு விதிகளில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய விதிகள் குறித்து பரவலாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்கள் புதிய விதிகளுக்கு இணங்கி செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளன.

அதேபோல், லிங்க்டு இன், ஷேர் ஷட், கூ, ஆகிய நிறுவனங்களும் புதிய விதிகளின் படி இந்தியாவில் நியமிக்கப்படும் அதிகாரிகளின் பெயரையும் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், டுவிட்டர் நிறுவனம் புதிய விதிகளை பின்பற்றுவது தொடர்பாக எந்த விவரத்தையும் அளிக்கவில்லை.

Contact Us