சிறைவைக்கப்பட்டிருந்த பாரிய ஈரானிய கப்பல் விடுவிப்பு; திடீரென நடந்தது என்ன?

ஈரான் நாட்டைச் சேர்ந்த எம்.டி.ஹாா்ஸ் என்ற கப்பல், கச்சா எண்ணெயை கள்ளச்சந்தையில் விற்பதற்கு கொண்டு சென்றதாக குற்றம் சாட்டி, அந்த கப்பலை கடந்த ஜனவரி 24 ஆம் தேதி இந்தோனேசிய அரச சிறைப்பிடித்தது. கப்பல்களுடன் சோத்து 36 ஈரானிய பணியாளா்களையும், 25 சீன பணியாளா்களையும் இந்தோனேசிய அரசு கைது செய்தது.

இந்தோனேசிய எல்லைக்கு உள்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக அக்கப்பல்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இரு கப்பல்களின் மாலுமிகளுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நிபந்தனையுடன் இரு கப்பல்களையும் விடுவித்துள்ளதாக இந்தோனேசிய அரசு நேற்று(சனிக்கிழமை) தெரிவித்தது. முன்னதாக, கைது செய்யப்பட்ட தங்கள் நாட்டைச் சோந்த பணியாளா்களை முறையாக நடத்த வேண்டும் என்று சீன அரசு இந்தோனேசியாவுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்க அரசு ஈரான் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. அதன் காரணமாக அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை பெரும்பாலான நாடுகள் நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Contact Us