துறைமுக நகரத்தில் உருவாகும் மருத்துவமனையின் பெயரைக் கேட்டாலே ஆச்சரியப்படபோகும் இலங்கையர்கள்!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு சீனாவுடன் உறவு இருப்பதால் மற்ற நாடுகளும் முதலீட்டாளர்களும் இங்கு வரமாட்டார்களா? என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப்பபட்டு உள்ளது.

நேற்று (29) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர்களான ஜீ.எல் பீரிஸ் மற்றும் அஜித் நிவார்ட் கப்ராலிடம் இந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த அஜித் நிவார்ட் கப்ரால்,

‘“ஏற்கனவே பல நாடுகளின் சிறப்பு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து இந்த துறைமுக திட்டத்தை கவனித்துள்ளனர். அவர்கள் இந்த திட்டத்தில் ஆர்வமாகவும் உள்ளனர்.

குறிப்பாக, துறைமுக நகரத்தில் கட்டப்பட உள்ள பள்ளியின் பெயர் ஐரோப்பிய நாட்டு பெயராகவும் இருக்கலாம்.

மேலும், இங்கு கட்டப்படவுள்ள மருத்துவமனையின் பெயர் இலங்கையில் பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கப்போகின்றது. அந்த வகையில் இது ஐரோப்பிய மக்களிடையே மிக நெருக்கமான பெயராகவும் இருக்கலாம்” என தெரிவித்தார்.

Contact Us