மோடியை அசிங்கப்படுத்திய மம்தா- 30 நிமிடம் லேட் 15 நிமிட ஆலோசனை கிளம்பீட்டார்…. !

வங்கக் கடலில் உருவான ‘யாஸ்’ புயலானது கடந்த மே 26ம் தேதி ஒடிசா மேற்கு வங்கத்திற்கு இடையில் கரையை கடந்தது. இதனால் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று பிரதமர் மோடி, மேற்கு வங்கம் சென்றார். நடக்க இருந்த கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி 30 நிமிடம் தாமதமாக வந்தார். வந்த உடனே அந்த தன் கையில் இருந்த அறிக்கையை எடுத்து, கூட்டத்தில் இருந்த ப.ஜ.க உயர் அதிகாரிகளிடம் நீட்டினார். பின்னர் 15 நிமிடம் மோடியோடு பூட்டிய அறை ஒன்றில் பேசிவிட்டு, மோடி நடத்திய மாநாட்டில் கலந்து கொள்ளாமல் காரில் ஏறிச் சென்றுவிட்டார். இதனால் மோடி & ப.ஜ.க டீம் கடுப்பாகி உள்ளார்கள்…

டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு முதலில் ஒடிசா சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்துவிட்டு,பின், ஹெலிகாப்டர் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பிரதமர். இது குறித்து ஆலோசிக்க அன்று பிற்பகல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முற்பட்டார். மோடி முதல் கொண்டு அனைவரும் நேரத்திற்கே கூடி விட்டார்கள். ஆனால் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 30 நிமிடம் கழித்து சாவகாசமாக வந்த மம்தா பானர்ஜி, தன் கையில் இருந்த அறிக்கையை மட்டும் கொடுத்து விட்டு. சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தால் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி. நட்டா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மம்தாவின் செயல் எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்று கூறியுள்ளார். அதேபோல் மேற்கு வங்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான சுவேந்து அதிகாரி, “மம்தாவைப் போல் எந்தவொரு முதல்வரும் நடந்துகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் மோடிக்கு ஒரு லேடி ஷாக் கொடுத்துள்ளார்.

Contact Us