விட்டால் சீனா எல்லோரையும் அழித்து விடும்- அனைத்து நாடுகளும் ஒன்று கூடுங்கள் …

சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டின் மீது விசாரணையை மேற்கொள்ள விரும்பியது. எனினும் ஆஸ்திரேலியா சீனாவிடம் விசாரணை மேற்கொள்ள வற்புறுத்தி வந்தது. எனவே தற்போது வரை இல்லாத அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.  வுகான் பரிசோதனை நிலையத்தில் என்ன நடந்தது என்று, அவுஸ்திரேலிய அரசு கேட்ட கேள்விக்கு சீனா இதுவரை எந்த ஒரு பதிலையும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான கெவின் ரட், உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவிற்கு எதிராக நிற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, சீனாவின் பொருளாதாரத்திற்கும் புவிசார் வற்புறுத்தலிற்கும் அனைத்து நாடுகளும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.  இல்லையென்றால், ஒரு நாள் நாம் அனைவரும் சீனாவுக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலை தோன்றும் என்று கூறியுள்ளார். இது இவ்வாறு இருக்க, சீனா மேலும் பல வைரசுகளை தயாரித்து உலகில் பரப்பி விட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Contact Us