திருமண நிகழ்வில் வந்து விழுந்த பீரங்கி! 7 பேர் உடல் சிதறி பலி!

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற பீரங்கி குண்டு வீச்சு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெிளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளையில் ஆப்கானிஸ்தான் இராணுவமும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள கபிஷா மாகாணத்தின் டகாப் மாவட்டத்தில் நேற்று பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது ஒரு பீரங்கி குண்டு அங்கு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் விழுந்து வெடித்தது.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர். இந்த பீரங்கி குண்டு வெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Contact Us