ஒரு வருடத்திற்கு முன்பு அடித்த நல்லபாம்பு பயணக்கட்டுப்பாடு நேரத்தில் வந்து பழிவாங்கியுள்ளது? வன்னியில் வியக்க வைக்கும் சம்பவம்!

முல்லைத்தீவில் நபரொருவரை நல்ல பாம்பு கடித்துள்ள சம்பவமொன்று இரு தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபரையே இவ்வாறு குறித்த பாம்பு கடித்துள்ளது.

கடந்த சுமார் ஒரு வருடங்களுக்கு முன் வளவிற்குள் வந்த நல்ல பாம்பு ஒன்றை 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.

தாக்கப்பட்ட குறித்த பாம்பு அப்போது தப்பியோடியுள்ளது, இந்நிலையில் அந்த நல்லபாம்புதான் தற்போது வந்து தன்னை கடித்ததாக நம்புகிறார் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிர் தப்பி ராஜன் என்ற நபர்.

இந்த சம்பவம் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் பேசப்படும் ஒரு சம்பவமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us