பிரதமரிடம் புகார் அளித்த 6 வயது சிறுமி; எதற்காக தெரியுமா?

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகளை ஆசிரியர்கள் எடுப்பதாக காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு புகார் அளித்த ீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், “எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன் பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்?. என்ன செய்ய முடியும் மோடி ஐயா?” என அந்த சிறுமி பேசியிருந்தார்.

தற்போது டுவிட்டரில் இந்த வீடியோவை பல ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். பல ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

Contact Us