சீனாவில் ‘உலகின்’ முதன்முதலாக… பாதிக்கப்பட்டுள்ள நபர்…! பெரும் அதிர்ச்சி!

சீனாவில் H10N3 வேரியண்டால் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்ததுள்ளது.

Experiments H10N3 variant caused bird flu in China.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மீண்டும் அங்கு பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாகவே சீனாவில் பறவை காய்ச்சல் பரவவது சாதாரணம். ஆனால் அவை மரண எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தான் அந்த நோயின் தீவிரம் ஆராயப்படும்.

இதற்கு முன் கடந்த 2016 – 17ம் ஆண்டில் சீனாவில் H7N9 என்ற வகை வேரியண்ட் பாதிப்பால் 300 பேர் வரை பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சீனாவில் பரவிய பறவைக் காய்ச்சலை விட இந்த H10N3 வகை வேரியண்ட், உலகிலேயே முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

H10N3 வகை பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட சீனாவின் Zhenjiang நகரைச் சேர்ந்த அந்த 41 வயது நபர், கடந்த மே 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைக்கு பின், அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்ய இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் பலருக்கு பரவாமல் இருக்க, பாதிக்கப்பட்ட நபருடைய நெருங்கிய தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு அவர்களின் உடல்நிலையையும் மருத்துவர் குழு கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us