இவங்கள நியாபகம் இருக்கா…? தற்போது நடந்துள்ள நெஞ்சை உலுக்கும் சோக நிகழ்வு…!

சைக்கிள் பெண்’ என்று அழைக்கப்பட்ட ஜோதி குமாரி தந்தை இறந்த செய்தி அனைவரையும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

death of Jyoti Kumari\'s father, known as the \'Cycle Girl

கடந்த வருடம் கொரோனா லாக்டவுனில் தன் தந்தையை சைக்கிளில் வைத்து 1200 கிமீ பயணம் செய்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்தவர் ஜோதி குமாரி.

புலம் பெயர்ந்த தொழிலாளியான ஜோதியின் தந்தை மோகன் பாஸ்வான் ஒரு சிறு விபத்தில் இ-ரிக்‌ஷா ஓட்ட முடியாமல் முடங்கிப் போனார். அதோடு அவர்கள் தங்கியிருந்த அறையின் உரிமையாளரும் வாடகை பாக்கிக்காக நெருக்கடி கொடுக்கத் தொடங்கியதால் சொந்த ஊருக்கே திரும்ப செல்ல முடிவெடுத்தனர்.

இந்நிலையில் தான் ஜோதி தன் தந்தையை சைக்கிளில் வைத்து 1200 கிமீ பயணம் செய்து பீகார் மாநிலத்தை அடைந்தார். மே 10ம் தேதி ஆரம்பித்த இவர்களின் பயணம் மே 16ம் தேதி முடிந்தது.

இந்த செய்தி நாடு முழுவதும் பரவி ஜோதி குமாருக்கு சைக்கிள் பெண் என்ற பட்டத்தையும், அவரின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சமாகவும் அமைந்தது.

ஆனால் தற்போது அவர்களின் குடும்பத்தில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு இடியாக இறங்கியுள்ளது எனலாம்.

கடந்த திங்களன்று ஜோதிகுமாரியின் தந்தை மோகன் பாஸ்வான் பீகார் மாநிலத்தின் தார்பங்கா மாவட்டத்தில் தன் சொந்த ஊரில் மாரடைப்பு காரணமாக இறந்தார். மோகன் பாஸ்வான் உயிரிழக்க, குடும்பமே தற்போது சோகத்தில் தத்தளித்து வருகிறது.

Contact Us