மாணவியை கர்ப்பமாக்கி குடும்பம் நடத்திய ஆசிரியர்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!

உகண்டாவில் உள்ள புடலஜா மாவட்டத்தில் வசிக்கும் ஜான் ஒமாண்டி(31) என்ற தனியார் பள்ளி ஆசிரியர், தன்னிடம் பயிலும் 16 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகியிருக்கிறார். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்ததால் இருவரும் கடந்த ஜனவரி மாதத்தில் ஊரை விட்டு ஓடியுள்ளனர். இந்நிலையில்…

அந்த மாணவியின் பெற்றோர் காவல் துறையினரிடம், தங்கள் மகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் வலை வீசி தேடி வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது. எனவே காவல்துறையினர், அந்த மாணவியின் பெற்றோருடன் அங்கு சென்றுள்ளனர்.

அங்கு, அந்த மாணவி, ஜானை திருமணம் செய்துகொண்டு கர்ப்பிணியாக வாழ்ந்துகொண்டிருப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். காவல்துறையினர், அந்த சிறுமியை கர்பமாக்கிய குற்றத்திற்காக ஜானை கைது செய்திருக்கிறார்கள்.

Contact Us