சந்திரமுகி சாமியார் கெட்டப்பில் சீமான்.. மன்னர் ஸ்டைல் போட்டோவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்த சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியின் மூலம் அரசியலில் நுழைந்து மற்ற கட்சியினருக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். மேலும் இளைஞர்களின் வருங்காலத் தலைவராகவும் எதிர்பார்க்கப்படுகிறார்.

இவரது பேச்சை ரசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். ஆனால் இவருக்கு ஓட்டுப் போடுவதற்கு மட்டும் அவர்களுக்கு என்ன என்பது தெரியவில்லை. சமீபத்தில் திருவொற்றியூர் தொகுதியில் நின்ற சீமான் தோல்வியடைந்தார்.

ஆனால் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு பிறகு அதிக வாக்கு சதவீதத்தை பெற்று மூன்றாவது கட்சியாக மாறியுள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி.   இதுவே ஒரு வெற்றிதான் என்கிறார்கள் சீமான் விசுவாசிகள். சீமான் முதலில் சினிமாவில்தான் கால்தடம் பதித்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் கூட்டணியில் வெளியான அமைதிப்படை படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி, வீர நடை, தம்பி, வாழ்த்துக்கள், இனியவளே போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். ஆனால் இவருக்கு இயக்குனராகவும் நடிகராகவும் பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.  இந்நிலையில் சமீபத்தில் சோழப்பேரரசு போன்ற கெட்டப்பில் சீமான் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களால் கேலி கிண்டல்கள் செய்யப்படுகின்றனர. மேலும் சந்திரமுகி படத்தில் வரும் சாமியார் வேடத்தில் இருப்பதாகவும் கிண்டலடிக்கின்றனர்.

Contact Us