வியட்நாமில் வேறு ஒரு கொரோனா: இலங்கை வர தடை என அறிவித்துள்ள சிங்கள அரசு !

வியட்நாமியர்கள் மற்றும் கடந்த 14 நாட்களில் வியட்நாமுக்கான பயண வரலாறு கொண்ட எவரும் இலங்கைக்குள் நுழைய உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை குறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் தெமியா அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவிய பி.1.617.2 திரிபும் பிரிட்டனில் பரவிய பி.1.1.7 திரிபு வகையும் கலந்த ஒரு புதிய கோவிட் திரிபு வியட்நாமில் பரவி வருவதாக வியட்நாம் சுகாதார அமைச்சர் குயேன் தெரிவித்துள்ளார்.இந்த வகை திரிபு காற்றில் வேகமாகப் பரவி வருவதாகவும் இது மிகவும் ஆபத்தானது எனவும் வியட்னாமிய சுகாதார அமைச்சர் குயேன் எச்சரித்துள்ளார்.

வியட்னாமில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வைரஸ் முன்னர் பரவிய வைரஸ் திரிபுகளை விட வேகமாகப் பரவி வருகிறது எனவும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் குயேன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே வியட்னாமில் கண்டறியப்பட்டுள்ள ஆபத்தான வைரஸ் இலங்கைக்குள் பரவாது தடுக்கும் நோக்கில் உடனடியாகப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Contact Us