இடுப்பில் மறைத்து ரகசியமாக கடத்தல்’!..தமிழர் பகுதியில் சிக்கிய இளைஞர்.. பரபரப்பு சம்பவம்..!

சென்னையில் இளைஞர் ஒருவர் இடுப்பில் லட்சக்கணக்கான பணத்தை கட்டி கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youth held at Chennai Central with Rs 28 lakh

ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து ரயில் மூலம் மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஹைதராபாத்திலிருந்து அதிகாலை சென்னை வந்த ரயில் பயணிகளிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Youth held at Chennai Central with Rs 28 lakh

அப்போது இளைஞர் ஒருவர் தனது இடுப்பு பகுதியில் பணத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர், குண்டூரைச் சேர்ந்த கோணகண்டியா சந்திரசேகர் என்பதும், 28 லட்சம் ரூபாயை இடுப்பில் மறைத்து எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Youth held at Chennai Central with Rs 28 lakh

மேலும் இந்த 28 லட்ச ரூபாய் பணத்துக்கு சரியான ஆவணங்கள் இல்லாததால், அவை பரிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக நடத்திய சோதனையில், இளைஞர் ஒருவர் இடுப்பில் மறைத்து பணத்தை எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us