2016ல் பாராசூட் உதவி இல்லாமல் 25000 அடி உயரத்தில் இருந்து குதித்த அமெரிக்கர்..

கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அன்று மூத்த அமெரிக்க ஸ்கைடைவர் லூக் ஐகின்ஸ் என்பவர் எந்தவித பாராசூட் உதவியும் இல்லாமல் கடல் மட்டத்திலிருந்து சுமார் 25,000 அடி (7600 மீட்டர்) உயரத்தில் இருந்து குதித்த முதல் நபர் என்ற வரலாற்றை உருவாக்கினார். மேலும் 100 அடி சதுரமுள்ள வலையில் தரையிறங்கும் நோக்கத்துடன் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்த இவர் தைரியமாக களமிறங்கிய போது உலகமே அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.

‘ஹெவன் சென்ட்’ என்று அழைக்கப்படும் ஸ்டண்டின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளை தற்போது நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ஸ்கைடைவர் லூக் ஐகின்ஸுக்கு அப்போது வயது 42 இருக்கும். அவர் ஒரு பிளேனில் இருந்து கீழே குதித்து, 30 முதல் 30 மீட்டர் நிகர அமைப்பு கொண்ட மென்மையாக வலையில் விழுந்தார். இதனை நெட்டிசன்கள் ‘ஃப்ளை ட்ராப்’ என்று அழைத்து வருகின்றனர்.

கலிஃபோர்னியா பாலை வனப்பகுதியில் தான் இந்த அபாயகரமான ஸ்டண்ட் நிகழ்த்தப்பட்டது. மேலும் இதனை காண ஆர்வமாக திரண்ட பார்வையாளர்கள் கூட்டம் சுமார் இரண்டரை நிமிட ஃப்ரீஃபாலுக்கு மூச்சுத் திணறி நின்றனர். மேலும் அந்த நபர் மிக மென்மையான வலையில் தரையிறங்கி தனது சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முதலில் பதிவுசெய்யப்பட்டு பின்னர் தொலைக்காட்சிகளில் பகிரப்படும் வழக்கமான ஸ்டண்ட் வீடியோக்களை போலல்லாமல், ஒரு தீவிரமான ஸ்கைடைவர் மற்றும் BASE ஜம்பரான ஐகின்ஸ் ஸ்டண்டை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்தார். மேலும் இது ஒரு மணிநேர சிறப்பு நிகழ்ச்சியாக ஃபாக்ஸ் நெட்ஒர்க்குகளில் இது ஒளிபரப்பப்பட்டது.

ஃப்ளை ட்ராப்பில் ஸ்டண்ட் செய்து மக்கள் அனைவரையும் மூச்சுத்திணற செய்து மிக பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு, ஐகின்ஸ் வலையில் ஏறி, ஆரவாரம் செய்து, தனது மனைவி மோனிகாவை மகிழ்ச்சி பெருமிதத்தோடு கட்டி அணைத்தார். ஏனெனில் அவர் பாதுகாப்புக்காக பாராசூட் அல்லது விங் சூட் என எதுவும் இல்லாமல் மிக உயர்ந்த ஸ்கைடைவ் செய்து கின்னஸ் உலக சாதனையை முறியடித்தார்.

அந்த வியக்க வைக்கும் காட்சிகள் தற்போது ட்விட்டர் யூசர்கள் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறது. கடந்த மே 31 அன்று வீடியோவைப் பகிர்ந்ததோடு அதனை ‘முழுமையான பாங்கர்ஸ்’ என்று கேப்ஷன் செய்திருந்தார்.

திகைப்பூட்டும் ஸ்டண்ட் நெட்டிசன்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. இந்த வீடியோ பகிரப்பட்ட 24 மணி நேரத்திலேயே 3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 30,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் பல நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து வியந்து பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஐகின்ஸ் இந்த சாதனையை படைப்பதற்கு முன்பு சுமார் இரண்டு ஆண்டுகள் பயிற்சி செய்து வந்தார். இதற்கு முன்பு சுமார் 18,000 அடி உயரத்தில் இருந்து பாரசூட் உதவியுடன் கீழே குதித்து சாதனை படைத்தார். மூன்றாம் தலைமுறை ஸ்கைடைவர் ஐகின்ஸ் அந்த சாதனையை முறியடிக்க நினைத்த போது ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் ஐகின்ஸை பாராசூட் அணிய உத்தரவிட்டார். ஆனால் இந்த சாதனையை நிகழ்த்தும் சில நிமிடங்களுக்கு முன்பு தான் பாராசூட் அணியும் யோசனையை ஐகின்ஸ் கைவிட்டார். பின்பு நடந்ததோ உலக சாதனையாக பதிவானது.

Contact Us