அதிகரித்து வந்த பயங்கரவாதம்… குறி வைத்து தாக்கிய ராணுவம்… வெளியான பரபரப்பு அறிக்கை.

ஆப்கானிஸ்தானில் இருபது வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையில் பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றனர். அதேசமயம் பயங்கரவாதிகளுக்கு ராணுவமும் எதிரான தாக்குதல்களை தீவிரமாகியுள்ளது. மேலும் இராணுவமானது பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் 165 தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் காலையுடன் முடிவடைந்த ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாக்மன், நங்கார்ஹர், காந்தஹார், பாரா, கஜினி, ஹெரட் ஆகிய மாகாணங்களில் வான் வழியாகவும், தரை வழியாகவும் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் நடத்திய தாக்குதலில் 165 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்த சம்பவத்தில் 85 பயங்கரவாதிகள் பலத்த காயமடைந்துள்ளனர்.

Contact Us